In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Thursday, October 19, 2006

செவ்வரி

பாவை விழி
வழி ஓடும்
செவ்வரி நரம்போ..
இல்லை
மலர்ந்தும் மலராத
மழலையின் விழிவண்ணமோ?

Monday, September 18, 2006

ஆகாய விளக்கு



ஆகாயத்தில்
ஓர்
லாந்தர் விளக்கு..
அழகாய்
என்
வீட்டுக் கண்ணாடியில்...

Wednesday, September 13, 2006

கோபுர வாயிலிலே...

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..
அமெரிக்காவிலும்தான்..
இடம்: லிவர் மூர், சிவா-விஷ்ணு ஆலயம்,கலிஃபோர்னியா

Saturday, July 22, 2006

பசுங்குடை


வெயிலின்
நிழலுக்கு
என்
பசுங்குடை...
ஓர்
எறும்பு
சொன்னது...

Saturday, July 08, 2006

சிலந்திவலை


சிலந்திவலையாய்
கம்பிவலையில்
ஒரு
தொங்கு பாலம்!

இடம்: சான்ஃபிரான்ஸிஸ்கோ,கலிஃபோர்னியா

Place: SanFrancisco,CA.

Sunday, July 02, 2006

மலரும் மொட்டும்


மழலையின்
மலர்ச்சியாய்
மலர்
பிஞ்சின்
கூப்பிய
விரல்களாய்
மொட்டு
!

Tuesday, June 27, 2006

கான மயிலாட...




கான மயிலாட
வான் மழை
வருமாயின்
வான்கோழியாட
வருவது யாரோ?
சிறு தோகை
காண
சிறு தூறலாவது
வாராதோ?

Monday, June 26, 2006

ஏழில் ஒன்று எழிலாக


ஏழில் ஒன்று
காதலின் சின்னமென்று
எழிலாய் நிற்குதங்கு
'லேகோலாண்ட்'
பொம்மை நகரிலே!
பதிக்கிறேன்
உங்கள்
பார்வைக்கிங்கு!

இடம்: லிகோலேண்ட், சாண்டியாகோ
Place: LegoLand, Sandiago, CA,USA

Saturday, June 24, 2006

கரும்பாறை


அழகான
ஆனை பார்
அசைந்தாடும்
வாலு பார்
கரும்பாறையொன்னு
கால்
முளைச்சு
போவது போல்
நடந்து போகும்
அழகு பார்!

Friday, June 16, 2006

பரமன் - சிவன்



ஆதி சிவன்
அமர்ந்த படியே
அருள் பாலிக்க
அவன்
தாழ் பணிய
அடியார்கள்
கூட்டம்!
இடம் : கெம்ப் போர்ட், பெங்களூர்
Place: Kemp Fort, Bangalore,India.

Wednesday, June 14, 2006

வெண்மணல்


விண்ணிலிருந்து
ஒரு
பார்வை...
கதிரொளியில்
பனி
முகடுகள்
வெண்மணலாக

Monday, June 12, 2006

குடை கொண்ட மிளகாய்


குடை கொண்ட
மிளகாய்..
கண்ணாடிக்
கூண்டினுள்
அழகாய்!
துணையாய்
இரு
செர்ரிக்களுடன்!


இடம்: சான்ஃபிரான்ஸிஸ்கோ, விமானநிலையம்.

Thursday, June 08, 2006

டிக்கட்?




பாப்பாவே

ஆனாலும்

தப்பாப்போனா

'டிக்கட்' தான்..






நண்பர் சக்தி மின்னஞ்சலில் தமக்கு வந்ததை, எமக்கு அனுப்பியதை, உங்கள் பார்வைக்கு..

Wednesday, June 07, 2006

பூமராங்கின் முழுவடிவம்


புதைந்த
பூமராங்கின்
முழு
வடிவம்...
இடம்:
செயிண்ட் லூயிஸ்,

Tuesday, June 06, 2006

பூமராங்க்


வானை
நோக்கி
எறியப்பட்ட
பூமராங்க்

திரும்பி
வந்து
பூமியில்
புதைந்ததோ?


இடம்: செயிண்ட் லூயிஸ், ஆர்ச்

Monday, June 05, 2006

நீர்விளையாட்டு


மழலையர்
மனம்
மகிழும்
நீர் விளையாட்டு.
இடம்: கியூபர்டினோ, கலிஃபோர்னியா


Sunday, June 04, 2006

காலைக்கதிர்


மனசு
மயங்கும்
காலைக்கதிரின்
மஞ்சள்
அழகு!
இடம்: சென்னைக்கடற்கரை

Saturday, June 03, 2006

ஒளியில் கோபுரம்



இரவின்
அமைதி!
ஒளியில்
கோபுரம்!
லிவர் மூர் கோயில், கலிஃபோர்னியா

Friday, June 02, 2006

வெண்மலர்


மலரின்
வெண்மை
மனிதர்
மனங்களில்
தங்கினால்
மேன்மை...

Thursday, June 01, 2006

வெயில் காயல்


சிறு துயில்

ஒரு முழிப்பு

இதமாய் ஒரு வெயில் காயல்

மிதமான குளிரிலே...

ஒரு சுகானுபவம்...

குகைப்பாதை


மலையைக் குடைஞ்சி

அமைந்த பாதை

உல்லாச சவாரிக்கு...

தண்ணீரோ...தரையோ?



தண்ணீரோ..தரையோ..

பாண்டவர் மாளிகையின்
நீராழி மண்டபம் போல?

இடம்: ஹெர்ஸ்ட் கேஸ்டில், கலிஃபோர்னியா..

Wednesday, May 31, 2006

மாமல்லன் சிற்பம்



மாமல்லன் ஓவியம்..

மனதில் நிலையம்.

Tuesday, May 30, 2006

ஒரு பறவையின் பார்வை


ஒரு
பறவையின் பார்வை
இந்த
காமிராவின் பார்வையிலே...

Monday, May 29, 2006

தண்ணீர்த் தாமரை



தண்ணீரில் தான்
தாமரை பூக்கும்...
தண்ணீரே இங்கு தாமரையாக...
இரவில் பூத்த தாமரை!

முதல் வரவுக்கு..


முதல் வரவுக்கு..இட்லி..அல்ல இட்லிப் பூக்கள்..

பூக்கள் என்றாலே அழகுதான்.. எப்போதும் மலர்ச்சி..இன்று பூத்து, நாளை வாடலாம்..அது குறித்து வருத்தமில்லை..மலர்ச்சி..மலர்ச்சி..

இந்த நிமிடம் மகிழ்ச்சியாக வாழ... வாழ்ந்திடுவோம்..

மின்மினியின் 'கண்'மனி

இது மின்மினி -யின் துணைப்பதிவாய், கண்ணில் பதிந்ததை, காமிராவில் 'க்ளிக்'கி பதிவிடவே இத் தளம். வாருங்கள்...பாருங்கள்..பதியுங்கள்.

காமிராவுடன்...ஸாரி..அன்புடன்,

ச.சிவா