In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Sunday, February 18, 2007

வெங்காயத்தாமரை - நெஞ்சை அள்ளியதோ?

பரபரப்பா நடந்து முடிந்த நம்ம சர்வேசன் தக்காளி,வெங்காயம், உருளைக்கிழங்கு போட்டியில, நம்ம 'வெங்காயம்,தக்காளி உருளை' முதலாவதா வந்திருக்கு. ஓட்டு போட்ட எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க.

இந்தப் போட்டிக்கான முதல் அறிவிப்பு வந்த உடனே பெயர் கொடுத்தாச்சு. என்ன போட்டோ எடுக்குறதுங்கதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதல்ல தூங்கிக்கிட்டு இருக்கிற காமிராவுக்கு ஏதாவது வேலை கொடுக்கலாம்ங்கிற எண்ணத்துல ஓகே சொல்லியாச்சு.

தக்காளி, உருளை, வெங்காயத்த வச்சு என்னாத்த எடுக்கறதுன்னு ஒரு கிலிதான்னாலும், அட்லீஸ்ட் தக்காளிய வச்சாவது ஏதாவது கலர் காட்டிடலாம்னு ஒரு நம்பிக்கைதான்.

பெயர் கொடுக்கறதுல இருந்த சுறுசுறுப்பு, எடுக்கறதில காணோம். இன்னைக்கு எடுப்போம், நாளைக்கு எடுப்போம்னு பொழுது போனதே தவிர, வேற ஒன்னும் நடக்கலை. பரீட்சை எழுதுற காலத்துலேயே, முந்தின நாள்தான் படிக்கிற வழக்கமா, அதுமாதிரிதான் இதுவும் ஆயிடுச்சு. கடைசி நாளன்னிக்குத்தான் தக்காளி வாங்கப் போனேன். வழக்கமா வாங்குற கடையில இல்லாம, Safeway-யில போயி, 'roma' தக்காளி வாங்கினேன். அதுதான் நல்ல கலர்ஃபுல்லா இருக்கும். மத்த அயிட்டமெல்லாம், ஏற்கனவே வீட்டுல இருந்தது.




எப்படி எடுக்குறதுன்னு கற்பனை ஓடிட்டு இருக்கறப்ப, அப்படியே எடுத்தா எப்படியிருக்கும்னு ஒரு போட்டோ எடுத்துப் பாத்தேன். சும்மா வெங்காயத்த மட்டும், வெட்டி எடுத்துப் பார்த்தேன். அதான், நீங்க இடது பக்கம் பார்க்கிறது. தக்காளி என்னவோ அழகா இருந்தாலும், படம் என்னவோ திருப்தியாய் இல்லை. ஏதோ கண்ணுக்கு catchy-ஆ இல்லாதது போலிருந்தது.

சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான், நம்ம ஐடியா டிப்போ வேலை செஞ்சி, அம்மாகிட்ட யோசனை கேக்கலாம்னு தோணிச்சு. அவங்க நல்லாவே கலாரசனை உள்ளவங்க. ஏற்கனவே, அவங்களுக்கும் இந்தப் போட்டியில கலந்துக்க ஆர்வமிருக்கிறதா, தங்கமணி சொன்னாங்க. ஆனா, ப்ளாக் இல்லைங்கிறதால யோசிச்சு, விட்டுட்டாங்க போல.

நான் கேட்டதுதான் தாமதம், அதுக்காகவே காத்திருந்தா மாதிரி, 'ரெடி பண்ணிடலாமா'ன்னுட்டு ஆரம்பிச்சுட்டாங்க. மெமரி ஸ்டிக் மாத்தலாம்னு, போய் எடுத்துட்டு வரதுக்குள்ள, வெங்காயம் தாமரையாயிடுச்சு. உருளையும், இன்னொரு வெங்காயமும் தாமரை இலையாயிடுச்சு. அப்படியே, 'டாப் ஆங்கிளில்' எடுக்கலாம்னு முயற்சித்துப் பார்த்ததில், வெங்காயம் பிரிந்து பிரிந்து இருந்தது. அவ்வளவு, திருப்தியாக இல்லை.




சரி, கொஞ்சம் காண்டிராஸ்ட்-க்கு, குடை மிளகாய் வச்சுப் பார்க்கலாம்னு அதை எடுத்து வைத்தோம், 'சர்வேசன்' ஒத்துக்குவாரா என்ற கேள்வி மனதுக்குள் எழும்பியபோதும். இதுக்கு இடையில, தங்கமணி அவங்க பங்குக்கு, குட்டித்தக்காளிய அல்லியாக்கி கொண்டுவந்து வச்சாங்க. இது எடுத்தது எல்லாம், இரவு நேரத்திலேயே என்பதால், 'மேலே' யிருந்து ஒரு 'டிம்' லைட் ஃபோகஸும், சைடிலேயிருந்து ஒரு டேபிள் லைட் ஃபோகஸும் வைத்திருந்தேன்.






இந்த ஆங்கிளில் போட்டோ நன்றாக வந்திருப்பது போல் தோன்றியது. வெங்காயத்தின், பிளவும் அதிகமாகத் தெரியாமல், எல்லாம் அளவாய் வந்திருந்தது. சரி, எதற்கும் இதே ஷாட், மிளகாய் இல்லாமல் ஒன்று எடுத்திடலாம், சர்வேசன் ஏற்றுக்கொள்ள மறுத்தால், அதை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று அதையும் ஒன்று எடுத்துக் கொண்டேன்.








இது எல்லாம் எடுத்த பின்னால், உருளை ஒன்று மனுச உடம்பு வடிவில இருந்ததப் பார்த்தேன், அத வச்சு ஏதாவது எடுத்தா என்னனு தோணிச்சு. காசா, பணமா, எடுப்போம்னு எடுத்தேன். ஆனா, அதுவும் திருப்தியாய் இல்லை.


கடைசியில எதை அனுப்பலாம்னு, முடிவு பண்ணுறப்போ, குடைமிளகாயுடன் எடுத்ததையும், உருளையையும் தவிர்த்து, வெங்காயத்தாமரை - அல்லித் தக்காளி போட்டோவை அனுப்பினேன். இந்த போட்டோவுல, இன்னொரு சிறப்பம்சம், அதோட கருப்புப் பின்புலம். அம்மாவோட, கருப்பு ஸ்வெட்டர் அது. பச்சையில பின்புலம் வைக்கலாம்னாங்க, ஆனா இந்த கருப்பு ஒரு ப்ளஸ்ஸா, தக்காளிக்கு அமைஞ்சது.

போட்டியில வெல்லும்ங்கிற பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லாவிடினும், அழகா இருக்குன்னாவது கமெண்ட் வாங்கும்னு தோணிச்சு. வெற்றி போனஸ்தான்.

இந்தப் போட்டியில எனக்கு மிகவும் பிடிச்சதுன்னா, D,F,H, I போட்டோக்கள். எல்லாத்தையும் மீறி, கிரியேட்டிவிட்டிக்கு அட போட வச்சது, நம்ம பெருசோட 'F' போட்டோதான்.

மிக நல்லதொரு போட்டி. எங்கும் குண்டுகளும், போர்ச்சத்தமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் வலையுலகில், இந்தப் போட்டி ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்து, அந்தச் சத்தத்த கொஞ்சம் மறக்கச் செய்ததுன்னு சொன்னா, அது மிகையில்லை.

இந்த போட்டிக்கு பரிசு இருக்குன்னெல்லாம் தெரியாது, கெலிச்சப்புறம், சர்வேசனோட மெயிலப் பார்த்த உடனே ஆச்சரியப்பட்டேன். நூறு அமெரிக்க டாலர்கள் பரிசு எனவும், $25 எனக்கும் $75 உதவும் கரங்களுக்கும் எனச் சொல்லியிருந்தார். வலைநண்பர் பரணீயும், இவருமாகச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். போட்டின்னு வைத்து, அதற்கு கைக்காசு கொடுப்பது பெரிய விசயம்தான். அதுவும் நல்ல விசயங்களுக்கு உதவுவதற்கு பெரிய மனது வேண்டும், எனக்கென ஒதுக்கிய பங்கையும், உதவும் கரங்களுக்கே சமர்ப்பிக்கச் சொல்லிவிட்டேன். அந்த அமைப்புக்கு, மாதாமாதம் ஒரு சிறு தொகையை எங்கள் அலுவலகம் மூலமாகவும் அனுப்பிவருகிறோம்.

இந்தப் போட்டியை கலகலக்க வைத்ததில் சர்வேசனுக்கும் பரணீக்கும் மட்டுமல்ல, பங்கு பெற்ற அனைவரும், பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய வலைஞர்கள், அனானி முதற்கொண்டு எல்லோருக்கும் உண்டு. அனைவருக்கும், வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லிய நண்பர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்! அம்மாவுக்கும், தங்கமணிக்கும் ஸ்பெஷல் நன்றி. உடன் வெற்றி பெற்ற பெருசுக்கும், அபர்ணாவுக்கும் வாழ்த்துக்கள்!

இந்த புகைப்படங்கள் எடுத்தது எனது sony - F717 camera. இது குறித்து ஒரு கொசுறுச் செய்தி. இந்த காமிராவின் 'CCD' பழுதுபட வாய்ப்பிருக்கிறது. Manufacturing Defect, இதனை sony நிறுவனம், இலவசமாக சரி பண்ணித் தருகிறார்கள். உங்கள் நண்பர்கள் யாரேனும் இந்தக் காமிரா வைத்திருந்தால், இந்தத் தகவலை அவர்களிடம் சொல்லுங்கள். எனது காமிராவிலும் இந்தக் குறை இருந்தது, சமீபத்தில்தான் நிவர்த்தி செய்தேன். இது குறித்து அவர்களது தளத்தின் தகவல் பார்க்க: 'க்ளிக்'





Tuesday, February 13, 2007

போட்டோ எடுத்தாச்சு..குருமா போட்டுடலாமா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்க வச்ச போட்டிக்கு புகைப்படங்கள்ளாம் வந்தாச்சு, சர்வேசன் கட்டம் கட்டி காட்டியிருக்காரு. ஓட்டு போட்டு, போட்டியை 'கமகம''க்க வைங்க பார்க்கலாம்.

ஒருஒரு போட்டோக்கும், சும்மா ஜாலியா கமெண்ட் போடலாமா? போட்டோ எடுத்த அண்ணன்மார்/அக்காமார், கோவிச்சுடாதீங்க.. :))






எங்க நிறம் வேறேன்னாலும்,
ஒரே கோட்டுக்குள்ள வந்துட்டோம்,
நீங்களும் வந்துருவீங்கதானே, தமிழர்களே..
அட்லீஸ்ட் ஓட்டுபோடவாவது?








நாளக்கி காதலர்தினமாம்,
நானும் கொண்டாடத்தான்
வந்திருக்கேன்,
ஆனா, உதட்டுலே வெங்காய வாசம்,
ஒகே வா?














தக்காளிப் பொண்ணு,
பல்லவன் பஸ்ஸிலே,
வெங்காயப் பசங்க உரசரானுங்கோ, உருளைக்கிழங்கு
பொடியங்கோ எஸ்கார்ட்டாம்.







ஒரு கோப்பைக்குள்
எங்கள் குடியிருப்பு..











காமாலை கண்ணுக்கு மஞ்சள்,

இந்தக் காமிராவின் கண்ணுக்குமா?

மஞ்சளின் மங்கலம்,

இந்தப் போட்டோலேயும் தங்கட்டும்.








வெங்காயம் உரிச்சா கண்ணுக்கு அலர்ஜி,


இங்க கண்ணுக்கு குளிர்ச்சி?












வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு..

அது எல்லாத்துக்கும்தான்!










நாமிருவர் (தக்காளி,வெங்காயம்),


நமக்கு ஒருவர்(உருளை)













கூட்டமாய் ஒரு கும்மாளம்.













அரசியல்வாதியின் கூழைக் கும்பிடு,

ஓட்டு போட்டுருங்க!












சர்வேசன் போட்டியில எங்காளுங்க கலந்துக்குறாங்களாம், அதான் குடும்பத்தோட

பார்க்க வந்துருக்கோம்!








ஒடுக்கப்பட்ட தக்காளி,





ஆர்ப்பரிக்கும் வெங்காயம்!







ஆகாயத் தாமரை அல்ல..வெங்காயத் தாமரை, அல்லித் தக்காளி உடன்!

















உ.வெ தாத்தா..



அதாங்க உருளைக்கிழங்கு, வெங்காய தாத்தா!











கொடுவா மீசை கிழங்கு பாரு..ஓட்டுப் போடு தூள்!














தக தக தக தக்காளி வேட்டை!

Thursday, February 01, 2007

பந்தயத்துல கலந்துக்கிற தக்காளிப் பழமே!


அட ஒன்னும் இல்லைங்க, நம்ம 'சர்வேசன் அண்ணாச்சி', புகைப்பட போட்டி வைக்கிறாராம், அதான் விளம்பரம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாரு..
நானும் கலந்துக்கிடலாம்னு இருக்கேன், சும்மா ஜாலியாதாங்க.. நீங்களும் கூட வாங்களேன்..