தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்க வச்ச போட்டிக்கு புகைப்படங்கள்ளாம் வந்தாச்சு, சர்வேசன் கட்டம் கட்டி காட்டியிருக்காரு. ஓட்டு போட்டு, போட்டியை 'கமகம''க்க வைங்க பார்க்கலாம்.
ஒருஒரு போட்டோக்கும், சும்மா ஜாலியா கமெண்ட் போடலாமா? போட்டோ எடுத்த அண்ணன்மார்/அக்காமார், கோவிச்சுடாதீங்க.. :))
தக்காளிப் பொண்ணு,
பல்லவன் பஸ்ஸிலே,
வெங்காயப் பசங்க உரசரானுங்கோ, உருளைக்கிழங்கு
பொடியங்கோ எஸ்கார்ட்டாம்.
ஒரு கோப்பைக்குள்
எங்கள் குடியிருப்பு..
இந்தக் காமிராவின் கண்ணுக்குமா?
மஞ்சளின் மங்கலம்,
இந்தப் போட்டோலேயும் தங்கட்டும்.
வெங்காயம் உரிச்சா கண்ணுக்கு அலர்ஜி,
இங்க கண்ணுக்கு குளிர்ச்சி?
அது எல்லாத்துக்கும்தான்!
நாமிருவர் (தக்காளி,வெங்காயம்),
நமக்கு ஒருவர்(உருளை)
அரசியல்வாதியின் கூழைக் கும்பிடு,
ஓட்டு போட்டுருங்க!
சர்வேசன் போட்டியில எங்காளுங்க கலந்துக்குறாங்களாம், அதான் குடும்பத்தோட
பார்க்க வந்துருக்கோம்!
ஆர்ப்பரிக்கும் வெங்காயம்!
ஆகாயத் தாமரை அல்ல..வெங்காயத் தாமரை, அல்லித் தக்காளி உடன்!
உ.வெ தாத்தா..
அதாங்க உருளைக்கிழங்கு, வெங்காய தாத்தா!
கொடுவா மீசை கிழங்கு பாரு..ஓட்டுப் போடு தூள்!
தக தக தக தக்காளி வேட்டை!
25 comments:
super photos, super comments.
- Unmai
நல்லாதான் யோசிச்சிருக்கீங்க!
பிரமாதம்
comments-kum oru potti vachiralama?
roomba nallaruku. fotos=comments
naan
உண்மையை உண்மையாய் விளம்பிட்டுப் போனதுக்கு நன்றி, உண்மை.
நன்றி யோகன் பாரிஸ், சும்மா தமாசு பண்ண நினச்சு பண்ணினது..
கமெண்ட்ஸ்க்கு போட்டி வச்சா, 'கலாய்க்கற'துக்கே, ஆளுங்க இருக்காங்க, தூள் பண்ணிடுவாங்க.
ஆமா, நான் -னா யாரு, நான், சப்பாத்தி..அதுவா? :)
நல்லாத்தான் இருக்கு கமெண்ட் எல்லாம்.
லட்சுமி மேடம்,
அது என்னாங்க 'நல்லாத்தான்' இருக்கு..
அப்ப நல்லா இல்லையா..? :))
நீங்க திருநெவேலியா..அங்கதான் இப்படி பேசுவாக. :)
\\நீங்க திருநெல்வேலியா//
திருநெல்வேலி ன்னும் சொல்லிக்கலாம்
நேட்டிவ் அதுதான். பாட்டிதாத்தாக்கள் ஊர். என்னோட "உங்களுக்கு எந்த ஊரு" பதிவ நீங்க படிக்கலை போல.
நல்லா இல்லையான்னா..என் படமும் அதுல இருக்கே இன்னும் கொஞ்சம் நல்லா காமிரா பார்வை விவரமா போட்டிருந்தா ஊக்கமளித்தமாதிரி இருந்திருக்கும்.ஆனா சும்மா ஜாலிகுன்னு சொல்லீட்டீங்க முதலிலேயே:)
நினச்சா மாதிரியேதானா? 'உங்களுக்கு எந்த ஊரு' படிச்சுட்டு சொல்றேன்.
//நல்லா காமிரா பார்வை விவரமா போட்டிருந்தா ஊக்கமளித்தமாதிரி இருந்திருக்கும்//
அட நானெல்லாம் சும்மா, 'ஜாலி'க்கு போட்டோ சுடுறவன், விவரமா எழுதற அளவுக்கெல்லாம் தெரியாதுங்கோ..
படங்கள் எல்லாம் சூப்பர், உங்கள் ப்ளாக் பேக் கிரவுண்டுக்கு நல்லா சூட் ஆகுது.. :))))))
அப்புறம் என்ன பண்ணினீங்க இவ்வளவு தக்காளியையும் வெங்காயத்தையும் உருளையயும்?
உ.வெ.த சங்கத்திலேயிருந்து வந்து பாத்து கொடிகட்டப் போறாங்களாம்.
எங்களைப் படம் மட்டும் எடுத்து,
குருமா செய்யாதவர்னு கேஸ்.
ரொம்ப நல்ல யோசனை செய்து படங்கள் எடுத்து இருக்கீங்க.
நெல்லை வண்ணாரப் பேஎட்டையில் ஒரு காலத்தில் இருந்தவர்களுக்கும் நெல்லைப் பட்டம் தருவீங்களா?:-)
நன்றி கவிதா,
போட்டோவுக்காகவே, இந்த 'ப்ளாக்', வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வல்லிசிம்ஹன்,
போட்டோ எடுக்கறப்பவே நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தாங்க, 'என்னடா, போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கே, பஜ்ஜி,கிஜ்ஜி போடாம' ன்னு கேள்வி, அப்புறமென்ன, தக்காளி உட்பட, எல்லாம் பஜ்ஜி போட்டு காலி பண்ணியாச்சு.
த.வெ.உ சங்கத்துல இருந்து பாக்க வந்தா, அப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே தெரிஞ்சிருக்காதே, அப்புறம் எப்படி கேஸ் போடுவாங்களாம்?, :)
அட வண்ணாரப்பேட்டையாங்க, அப்ப நம்ம ஊருதான்..
ஏம்ப்பு, உன்ன போட்டோ போட்டிக்கு, கேன்வாஸ் பண்ணச் சொன்னா படத்த போட்டு பாட்டெழுதிகிட்டு இருக்கியேப்பு கமெண்ட்டுக்கு பதில் சொல்றப்போ நன்றி சொல்லாம ஓட்ட போடச் சொல்லப்பு
நானுமில்லை சப்பாத்தியுமில்லை, ஏன் பரோட்டவுமில்லை.
நான்-னால் அது நான்தான்!!..
நான்தான்
ஆமா ஸ்ரீ, மறந்தே போச்சு, அன்பு மக்களே..ஓட்டு போட்டுருங்க, சர்வேசரு கோச்சுக்கப் போறாரு..
அட பரோட்டா கூட இல்லையா.. அப்படின்னா பரட்டை என்ற அழகு சுந்தரமா? சொல்லுங்க நான் சார்..
அட!வண்ணாரப்பேட்டை நம்ம பேட்டை..! தாமிரபரணி தழுவி ஓடும் கரையருகே அமைந்த வீடுகள்.ஹும்..பழைய நனெப்புடா பேராண்டி!
நானேதான்
//தாமிரபரணி தழுவி ஓடும் கரையருகே அமைந்த வீடுகள்//
- ஆமாங்க. உங்க வர்ணனையில எனக்கும் ஞாபகத்த கிளப்பி விட்டுட்டீங்க..ம்ம்
ஓட்டு போட்டாச்சா?
சுந்தரம் என்றாலே அழகு, அதென்ன
அழகுசுந்தரம்? நடுசென்ட்ர் மாதிரியா?
நான்
அழகுசுந்தரம்-னா, அழகுக்கு அழகு-ங்க, இன்னும் 'நான்'லேயே இருக்கீங்களே,
பெரியவங்க எல்லாம் 'நான்'-னு சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, ஞாபகமிருக்கட்டும்.
தக்காளி படம் நல்லா இருக்குவே.
ஐயா,
வழிப்போக்கரே.. போற பாதையில தக்காளிய கடத்திட்டு போயிடாதீரும்,
போறவழியிலதான் சர்வேசர் உக்காந்திருப்பாரு, போயி ஓட்ட போட்டுரும்வே. மறந்துடாதீரும்.
படங்களின் ஐடியா அருமை. நண்பர்களுடன் பஜ்ஜி போட்டீர்கள். சைட் ட்ரிங்க் என்ன வைத்திருந்தீர்கள், தண்ணிதானா?
சகாதேவன்
Post a Comment